விவரங்கள்

திருமதி விமலாவதி பெனடிக்ற்
Frame

திருமதி விமலாவதி பெனடிக்ற்

அன்னை மடியில் : 22 July, 1952

ஆண்டவன் அடியில் : 29 March, 2017

யாழ். பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஜெர்மனி Juechen ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விமலாவதி பெனடிக்ற் அவர்கள் 29-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை லெட்சுமி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான தேவசகாயம் நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தேவபெனடிக்ற்(முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன உத்தியோகத்தர்) அவர்களின் ஆருயிர் மனைவியும், பத்மாவதி, சித்திரவேல், காலஞ்சென்ற நகுலேஸ்வரி(பிரேமா), கமலாவதி(கமலா), யோகேஸ்வரி(திலகம்), லிங்கேஸ்வரி(லிங்கம்) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும், சின்னராசா, புளோரன்ஸ்(ரஜனி), குகேந்திரன், புஸ்பராசா, செல்வராஜா, விவேகானந்தா, காலஞ்சென்ற பேர்ணாட், பெர்ணதேத்(பெர்ணி), பேணடேற்(வேணி), பெக்மன்ஸ்(டெசி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அல்பிரட், காலஞ்சென்ற ஜெகநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், யோகராணி, சகாயசுனித்தா(ஜான்சி) ஆகியோரின் அன்புச் சகலியும், நிர்மலன், துஷ்யந்தி, சஞ்சீவன், ராஜீவன், பிருந்தாவன் ஆகியோரின் அன்புச் சித்தியும், கெமிலியா, விஷ்ணுவர்த்தன், சுகன்யா, ரசித்தா, அலன் தினேஷ், சேரா, பேர்லினா, ஷார்லினா, டேனியன் ஆகியோரின் அன்பு மாமியாரும், நிஷாந்தி, சவன்யா, கபிலன், பிரியந்தி, திவ்யா, பிறிந்தன், அபிநயா, லொஜின், டெஸ்மன், டிஷானா, டெல்றின், டெனிசன், றொயிஸ்ரன் மனோஜ், றதீஷ் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், அபிஷேக், விதுஷன், சாத்வீகன், சதுஷ்நிகா, தக்க்ஷயன், ஜொனாதன், கலானா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

மேற்படி உறவுகளை ஆறாத்துயரில் ஆழ்த்திப் பிரிந்த விமலாவை வழியனுப்பும் இறுதிநிகழ்வு 03-04-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Buschgasse 41363 Jüchen என்னும் மண்டபத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Condolence Ceremony (Buschgasse 41363 Jüchen)
03 April, 2017 10:00 AM
Buschgasse 41363 Jüchen
ஜெர்மனி (Primary)
4921652739 4915145268751