விவரங்கள்

திருமதி தவமணிதேவி இராமநாதன்
Frame

திருமதி தவமணிதேவி இராமநாதன்

அன்னை மடியில் : 14 April, 1942

ஆண்டவன் அடியில் : 01 April, 2017

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உப்புவெளியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி இராமநாதன் அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவகுரு(ஓவசியர்), காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும், காலஞ்சென்ற இராமநாதன்(கட்டிட திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும், சிவசுதன்(Senior Programme Officer- Australian High Commission, Colombo) அவர்களின் அன்புத் தாயாரும், சுப்பிரமணியம்(பொறியியலாளர், இளைப்பாறிய செயலாளர்- வடகிழக்கு மாகாணசபை), கணேசம்மா, காலஞ்சென்ற தணிகாசலம்(Asst.Director- Education), செல்வநாயகி, நவமணிதேவி, தெய்வேந்திரராசா(லண்டன்), ஆனந்தராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஆன்ஸ்பெக்(Executive Officer, Seylan Bank, Trincomalee) அவர்களின் அன்பு மாமியாரும், ஷியாம், தனிஷ் ஷேன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : பாலேந்திரா நிரஞ்சன் (பெறாமகன்) (Family)

Ceremony Home (CTB ஒழுங்கை)
03 April, 2017 02:00 AM
இல. 84/8, CTB ஒழுங்கை, லவ் லேன், உப்புவெளி, திருகோணமலை.
சிவசுதன்(மகன்) — இலங்கை (Primary)
94773215595